×

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன் - ரஷ்யாவில் அதிர்ச்சி

ரஷ்யாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி தர்யா. இவர் சமீபத்தில் 10 வயது ஐவன் என்ற சிறுவன் மற்றும் பெற்றோருடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
 

அப்போது தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு ஐவனே காரணம் என குண்டை தூக்கிப் போட்டார். இதைக்கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மட்டுமில்லாமல், அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில மாதங்களாக தாங்கள் இருவரும் நெருங்கி பழகியதாகவும்,  தர்யாவின் கர்ப்பத்திற்கு நானே காரணம் என ஐவனும் நேரலையிலேயே கூறினான். ஆனால், இதை சில மருத்துவர்கள் மறுத்தனர். ஐவன் இன்னும் சிறுவன்தான். குழந்தையை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் அவனுக்குள் சுரக்கவில்லை என்றும் சோதனைக்கு பின் கூறினார்.  மேலும், தர்யாவின் கர்ப்பத்திற்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.

ஆனால், அதை ஐவனே ஏற்கவில்லை. தர்யாவின் குழந்தைக்கு தானே தந்தை எனவும், குழந்தையை நன்றாக வளர்ப்போம் எனவும் தெரிவித்தான். மேலும், அவர்களின் பெற்றோர்களும் இதே கருத்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News