×

13 ஆண்டுகளுக்குப் பின் அஜித் படத்தில் அந்த இசையமைப்பாளர்… அடித்தது ஜாக்பாட்!

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தில் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

அஜித் மற்றும் சுதா கொங்கரா இணையும் படத்தில் இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

லாக்டவுன் காலத்தில் அஜித் கதை கேட்டு ஓகே சொல்லியுள்ள இயக்குனர் சுதா கொங்கரா. இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் சுதா கொங்கரா. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் அஜித் ஹேங்ஸ்டராக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு தன் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ்தான் வேண்டும் என சுதா கொங்கரா சொல்லியுள்ளதாக தெரிகிறது. இது மட்டும் உறுதியானால் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் ஜி வி பிரகாஷ். அஜித்தின் கிரீடம் படத்துக்கு கடைசியாக ஜி வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். அவர் அஜித்துக்காக இசையமைத்த ஒரே படம் கிரீடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News