×

தமிழகத்தில் 144 தடை - தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அச்சம் தொடர்பாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட இருப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

சீனாவில் உருவான வைரஸ் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் கேரளா,  உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் 300 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 9 பேர் இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஒரு நாள் மக்கள் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஆனால், பலரும் இதில் அலட்சியம் காட்டியதால், பல மாநிலங்களிலும் 31ம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலம் புதுச்சேரியிலும் மார்ச் 31ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும், முக்கிய, அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.அத்தியாவசிய பொருட்களான மருந்து, காய்கறி, மளிகை கடைகள் செயல்படலாம். அதற்கு தடையில்லை. அவை வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளை மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News