×

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - இந்தியாவில் 147 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 162 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தமாக 2 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்து இத்தாலியும், ஈரானும் இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இந்நோயால் 2158 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும், 23,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News