Categories: Cinema News latest news

15 கோடி இருந்தா ஓகே.! எல்லாம் அந்த பரம்பரை செய்த வேலை.!

“சார்பட்டா பரம்பரை” படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்,  இதற்கு அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மொழி அல்லது மற்ற மொழி படங்களை இயக்கும் வாய்ப்பு பா.ரஞ்சித்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

அட ஆமாங்க…. இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து விக்ரமின் 61வது திரைப்படத்தை இயக்க உள்ளார். அதற்கிடையில், “நட்சத்திரம் நகர்கிறது” எனும்  திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். அந்த படத்தில் தினேஷ் கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், ஒரு முன்னணி OTT நிறுவனம் ரஞ்சித்திடம் ஒரு படத்தை இயக்கி தருமாறு கேட்டுள்ளது. அந்த படத்தை நேரடியாக OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ரஞ்சித்திடம் பேசியபோது ரஞ்சித் தரப்பு 15 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்-

பிரகாஷ் ராஜை வைத்து ரிஸ்க் எடுக்க தயாரான வினோத்.! அஜித் படத்தில் அதெல்லாம் நடக்காது.!

 

அதன்படி, அந்த தொகையை கொடுப்பதற்கு அந்த நிறுவனமும் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரஞ்சித் இயக்கும் OTT திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan