×

1.5 மில்லியன் சாதனை! மாஸ் காட்டும் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ டிரெய்லர் வீடியோ...

நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள பரமபத விளையாட்டு திரைப்படத்தின் டிரெய்லர் யுடியுப்பில் ஹிட் அடித்துள்ளது.
 

நடிகை திரிஷா முழுக்க முழுக்க அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ள பரமபத விளையாட்டு திரைப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது.இப்படம் அரசியல் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் மூலம் திரிஷா ஒரு ஆக்‌ஷன் கதாநாயகியாகவும் மாறி சண்டைக்காட்சிகளில் அசத்தியுள்ளார். மேலும், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை கே. திருஞானம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தா துரைராஜ் மற்றும் வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படம் திரிஷாவுக்கு 60வது படமாகும்.  இப்படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த டிரெய்லர் வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News