×

16 வயது சிறுமியிடம் காதல் மோசட… மயக்க மருந்து கலந்து நண்பர்களும் வன்புணர்வு – அதிரவைக்கும் சம்பவம் !

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 16 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் சேர்ந்து மயக்க மருந்து கலந்துகொடுத்து வன்புணர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 16 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் சேர்ந்து மயக்க மருந்து கலந்துகொடுத்து வன்புணர்வு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது வீட்டுக்கு எதிரே உள்ள ஜான்சன் என்பவர் வீட்டுக்கு கார்த்திக் என்ற நபர் வந்து சென்றுள்ளனர். அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி காதலிப்பதாக சொல்லியுள்ளார்.

அவரை நம்பிய சிறுமி அவரிடம் பலமுறை தன்னை இழந்துள்ளார். இதையறிந்த அவரது நண்பர்களான ஜான்சனும், விஸ்வராஜும் கார்த்திக்கின் அனுமதியோடு பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் 4 மாதங்களாக நடந்துள்ளது.

இதையடுத்து தற்போது சிறுமிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்தி போலிஸார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News