Categories: Cinema News latest news

விஜயோட ஆடும் போது 2 மாத கர்ப்பிணி…! தன் சோகமான அனுபவத்தை கூறிய பிரபல நடிகை…

தமிழ் சினிமாவில் நடனத்திற்கு பேர் போன நடிகர் இளையதளபதி விஜய். இவர் தமிழ் நாட்டின் ஹிருத்திக் ரோசன் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தன் நடனத்தால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்துலயும் இவர் நடனத்திற்கு என்றே ஒரு பாடல் இருக்கும்.

அந்த அளவுக்கு ஆட கூடிய விஜயுடன் ஜோடி சேர்ந்து ஆட நடிகைகளுக்கும் தில் இருக்க வேண்டும். இதுவரை இவருக்கு ஈடு கொடுத்து நடனமாடிய நடிகைகளில் முக்கிய இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். அவருக்கும் டான்ஸ் என்றால் உயிர் என பல நேர்காணலில் கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இவருடன் ஆடுவதற்கு வாய்ப்பு வந்தும் அதை சரி வர பயன்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் இப்பவரை ஒரு நடிகை கூறி வருகிறார்.

அவர் வேறு யாருமில்லை. நடிகை மாளவிகா. இவர் முதன் முதலில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் அஜித்துடன் சேர்ந்து நடித்தார். கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்து விட்டார். சந்திரமுகி, திருட்டு பயலே, வெற்றிக் கொடிகட்டு போன்ற ஹிட் படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர்.

இந்த நிலையில் குருவி படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்து விஜயுடன் ”டர்ரான்னா டன்னா” என்ற பாடலுக்கு சேர்ந்து ஆடியிருப்பார். அப்போது மாளவிகா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததால் சும்மா நடக்கிற மாதிரியான ஸ்டெப்பை மட்டும் போட சொல்லியிருப்பார் நடன இயக்குனர். ஆனால் இதை பற்றி இப்பவரைக்கும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் மாளவிகா. விஜயுடன் சேர்ந்து குத்தாட்டம் போட முடியவில்லையே என ஏங்குவதாக கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini