மீண்டும் 2 டெக்னீஷியன்களை மாற்றிய சேயோன் படக்குழு!

 
Seyon

'உலக நாயகன்' கமல்ஹாசன் தயாரிப்பில் 'தாய் கிழவி' இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கும் படம் தான் 'சேயோன்'.

இதில் ஹீரோவாக நம்ம சிவகார்த்திகேயன் தான் நடிக்கிறார். சமீபத்தில் தான் இதன் ஸ்டன்ட் இயக்குநர் சுப்ரீம் சுந்தருக்கு பதிலாக அன்பறிவை (அன்புமணி மற்றும் அறிவுமணி) ஒப்பந்தம் செய்தனர்.

தற்போது, இப்படத்தின் செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வீடியோ மூலம் அறிவித்துள்ளது. 

இதில் ஆல்ரெடி பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் ஆகிய இருவரின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமாருக்கு பதிலாக விது அய்யனாவும், கலை இயக்குநர் ஆர்கே நாகுவிற்கு பதிலாக அருண் வெஞ்சரமூடுவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்கள்.

From Around the web