இந்த வாரம் OTT & திரையரங்கில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி மொத்தம் மூன்று புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் இரண்டு படங்கள் தியேட்டர்களிலும், ஒரு படம் OTT-யிலும் வெளியாகப் போகிறது.
1.மொத ராத்திரி :
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் 'மொத ராத்திரி'. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அனிஷ்மா அனில்குமார், சேத்தன், சங்கீதா பாலன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், வர்ஷினி கார்மேகம், சுமித்ரா தேவி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
2.ராம் & லீலா :
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் 'ராம் & லீலா'. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் வர்திகா, சேத்தன், முனிஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், பிரியங்கா நாயர், விக்கி சிவா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
3.பியார் பிரேமா கல்யாணம் :
இளன் இயக்கி, நடித்துள்ள புதிய படம் 'பியார் பிரேமா கல்யாணம்'. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சான்வி மேகனா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை நேரடியாக OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.