கென் - ஜி.வி.பிரகாஷ் காம்போவில் உருவான 'முட்ட கலக்கி' பாடல் செய்த சாதனை!

 
Mutta kalakki song

இந்த ஆண்டு (2026) வெளியான தமிழ் படங்களில் 'யூத்' ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அள்ளி வெற்றியை பெற்றது. இதில் கருணாஸ் மகன் கென் கருணாஸ் தான் ஹீரோவாக நடித்ததோடு, படத்தை இயக்கவும் செய்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பராக இருந்தது. இருப்பினும் இளசுகள் தொடர்ந்து தங்களுடைய ப்ளேலிஸ்ட்டில் வைத்து கேட்கும் பாடல் 'முட்ட கலக்கி' தான்.

நம்ம ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் தான் எழுதி, பாடியிருந்தார். இப்பாடல் ஒரு சூப்பரான சாதனையை செய்திருக்கிறது.

இந்த பாடல் இதுவரை யூடியூபில் 250 மில்லியன் (25 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதுவும் இந்த ஆண்டு (2026) இந்தியாவில் ரிலீஸ் ஆன திரைப்படங்களின் பாடல்களில் இதுதான் highest-ஆம்.

From Around the web