24 இயக்குநருடன் 50வது படத்திற்காக இணைகிறாரா சூர்யா?.. ஹீரோயின் யாரு தெரியுமா?..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது 50வது திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சூர்யாவின் 50வது திரைப்படத்தை இயக்குநர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘24’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான அறிவியல் புனைகதை அனுபவத்தை வழங்கிய இந்த கூட்டணி, மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஹ்மான் மற்றும் சூர்யா கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த தகவல் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதேபோல் துரந்தர் படத்தில் தூள் கிளப்பிய பாலிவுட் நடிகர் அக்ஷய் கண்ணா வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், மதராஸி, காந்தாரா 2 மூலம் கவனம் பெற்ற நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக இணைவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நட்சத்திர பட்டாளம் படத்திற்கு பான்-இந்தியா அளவிலான வரவேற்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலங்களில் பெரிய பட்ஜெட் மற்றும் தரமான தயாரிப்புகளுக்காக கவனம் பெற்றுவரும் இந்த நிறுவனம், சூர்யாவின் 50வது திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள தகவல்களைப் பார்க்கும்போது சூர்யா50, வரவிருக்கும் தமிழ் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூர்யா ஜெட் வேகத்தில் முன்னேற உள்ளார் என்பது தெரிகிறது. போட்டிக்கு அஜித் சீக்கிரமே வருவாரா? என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
