×

லாரி மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் பலி - பா.ரஞ்சித் கடும் கண்டனம்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற லாரி மற்றொரு லாரியுடன் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 24 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்கள் மாநிலங்களுக்கு நடந்து செல்ல வேண்டாம். தமிழக அரசு அவர்களை ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்து செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெரும் துயரம். உழைக்கும் மக்களின் உயிர் தின்று பெருகும் நிர்வாக திறனற்ற அரசே, உனது அழிவு வெகு தூரத்தில் இல்லை !!!'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News