×

14 நாட்களில் 25 மில்லியன் பார்வையாளர்கள் - மாஸ்டரின் குட்டிக்கதை ரெக்கார்ட் பிரேக்

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு குட்டிக்கதை பாடல் யுடியூபில் குறைந்த நாட்களில் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில்  இடம் பெற்ற ஒரு குட்டிக்தை பாடல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. நடிகர் விஜயே இப்பாடலை பாடியிருந்தார். எனவே, இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், வீடியோ வெளியாகி 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த வீடியோவை இதுவரை 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 14 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News