×

இந்தாங்க 250 கோடி… எப்படியாவது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிங்க! அலிபாபா ஓனர் தாராளம்!

கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா 250 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்து இருக்கிறார்.

 

கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா 250 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்து இருக்கிறார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் உருவாகி இதுவரை 250 பேரைக் காவு வாங்கியிருக்கிறது. மேலும் 9000 பேர் வரை தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவுடனான விமானப் போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் துண்டித்து கொண்டுள்ளன. இதனால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் மா இந்திய மதிப்பில் 250 கோடி ரூபாய் நிதியளித்துள்ளார். அந்த பணத்தில் 100 கோடி ரூபாய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் மீதிப்பணம் சிகிச்சைகளுக்காவும் பயன்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்கா, சீனா, ஜாக் மா, அலிபாபா, America, china, alibaba

Alibaba owner gave rs 250 crores to corona virus medicine invention

From around the web

Trending Videos

Tamilnadu News