×

3 மாதம் இலவசம்! நீங்க எந்த ஏடிஎம்-மிலும் பணம் எடுக்கலாம் : நிதியமைச்சர் அறிவிப்பு

கொரானா வைரஸ் தொடர்பாக நாடெங்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.
 

சீனாவில் உருவாகிய வைரஸ் தற்போது தமிழகம் வரை பரவி விட்டது.  இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று மாலை வரை 12 ஆக உயர்ந்து விட்டது. இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல மாநிலங்களில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் 3 மாதங்களுக்கு எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானால் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News