குடும்பம் முக்கியம் தலைவா... 3 பேர் மிஸ்ஸிங் - சமுத்திரக்கனி ஆதங்கம்!

 
vijay samurthirakani

விஜய்யின் அரசியல்: 

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகர் என்ற உயர்ந்த அந்தஸ்திலிருந்து வந்த நடிகர் விஜய் திரைப்படத்துறையில் இருந்து விலகி அரசியலில் முழுவதுமாக இறங்கி தாவெகா கட்சியை ஆரம்பித்து அதில் தேர்தலில் போட்டியிட்டு முதல் தேர்தலிலே மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

vijay

குறிப்பாக திரைப்பட நடிகர்களையும் தாண்டி அரசியல் பிரமுகர்களே விஜய்யின் இந்த அசாத்திய வெற்றி பார்த்து ஆச்சர்யப்பட்டு வருகிறார்கள். இப்படியான சமயத்தில் விஜய் குறித்து சமுத்திரக்கனி பேசியிருக்கும் ஒரு விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

சமுத்திரக்கனி ஆதங்கம்: 

அதில் அவர் கூறியிருப்பதாவது, முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் முக்கியமான மூன்று பேர் மிஸ்ஸிங். அது எனக்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்திடுச்சு. உங்கள வெறுக்க நினைத்தவர்கள் வீட்டுக்கே சென்று அவர்களுடன் கைகுலுக்கி , தோள் மீது கை போட்டு, அன்பு செலுத்திய நீங்க அந்த முக்கியமான மூணு பேரை மட்டும் விடமாட்டீங்க அப்படின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு தலைவா...

உங்க பின்னால வரும் பல கோடி இளைஞர்கள் எல்லாருமே குடும்பம் தான் மிக முக்கியமானது என்ற எண்ணத்தை நீங்கள் நிச்சயம் உருவாக்க வேண்டும் என தன்னுடைய ஆதங்கத்தை சமுத்திரக்கனி கூறியிருக்கிறார் .

samuthirakani

 3 பேர் மிஸ்ஸிங்: 

முன்னதாக விஜய் தனது மனைவி சங்கீதா மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா உள்ளிட்டவர்களை தவிர்த்து தொடர்ந்து அரசியல் உச்சத்தில் சென்றிருப்பதை சமுத்திரக்கனி சுட்டிக்காட்டி பேசி இருக்கும் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. விஜய் இதை சரி செய்து மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து மக்களுக்கு சிறந்த பணியாற்றி வந்தால் அது மக்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என்பது தான் அனைவரது எண்ணமும் ஆக இருக்கிறது.

Tags

From Around the web