30 நாட்களில் 3 படங்கள்: அசத்தும் மமிதா பைஜூ
தென்னிந்திய திரையுலகில் வேகமாக முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து வரும் நடிகை மமிதா பைஜூ. மலையாளத்தில் பல படங்கல் நடித்திருந்தாலும் அவரை அடையாள படுத்தியது பிரேமலு படம்தான். அந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ட்யூட் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில் மமிதா பைஜூ நடிப்பில் 30 நாட்களில் 3 படங்கள் வெளியாகின்றது. விஜய் நடித்த கடசி படமான ஜனநாயகன் கடந்த் 23ம் தேதி வெளியானது. இதையடுத்து சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வருகிற ஆகஸ்ட் மாத 14ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இவர் நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் வருகிற ஆகஸ் 21ம் தேதி வெளியாகிறது. இதன் மூலம் 30 நாட்களில் இவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகின்றது.
