×

இயற்கை உபாதையைக் கழிக்க சென்ற 30 வயது பெண் – 15 வயது சிறுவன் செய்த கொடூர செயல் !

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி எனும் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கு 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் நகர்... இங்கு வசித்து வருகிறார் திருமணமான 29 வயது பெண். இவரது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் அவர் திறந்தவெளிகளில்தான் இயற்கை உபாதைகளை கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் மறைவானப் பகுதிக்கு சென்றபோது 15 வயது சிறுவன் ஒருவன் அவரை வழிமறித்துள்ளான். பின்னர் சற்றும் எதிர்பாராத விதமாக அவருக்குப் பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் அவனிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடியுள்ளார்.

அங்கு சென்றதும் நடந்ததைப் பற்றி கணவரிடம் சொல்ல, உடனடியாக அந்த சிறுவன் மேல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் அவரைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News