தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவர் தற்போது ஷங்கரின் உதவி இயக்குனரான எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் சுமோ என்ற காமெடி படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரிய ஆனந்த் நடித்து வருகிறார்.
ஜப்பான் நடிகர் யோஷினோரி தாஷிரோ இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், பொதுவாக ஒரு வெளிநாட்டு நடிகர் நம் நாட்டிற்கு நடிக்க வந்தால் அவருக்கு ஏற்றது போல சாப்பாடு தங்குவதற்கு இடம் என அனைத்தும் சௌகரியமாக தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டுவிடும். அப்படி தான், அந்த ஜப்பான் நடிகர் யோஷிநோரி தாஷிரோக்கும் கொடுக்கப்பட்டடுள்ளது.
அட ஆமாங்க அவருக்கு ஒரு நாளைக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதாம். அந்த நடிகர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 37 பீர் குடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல், அவருக்கு பிடித்த ஜப்பான் உணவுகளை தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறாராம்.
இதையும் படியுங்களேன்- பிரபல யூ-டியூப் சேனலை விலைக்கு வாங்கிய சிவகார்த்திகேயன்.? சத்தமில்லாமல் அவர் மனைவி செய்யும் வேலை…
மேலும், இவர் உருவத்தோற்றத்தில் மிகவும் பெரிதாக இருப்பதால் இவருக்கு என்றே பிரத்தியேகமாக ஒரு தனி கழிவறையும் அமைக்கப்பட்டதாம். இப்பொழுது, தயாரிப்பு நிறுவனம் அந்த செலவுகளை சரிக்கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர் என்கிறது சினிமா வட்டாரம்.
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…