×

4 கோடி ரூபாய் நிதியுதவி... உண்மையில் நீ பெரிய மனுஷன்தாம்பா!

நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் அறியப்படும் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர். இவரின் திரைப்படங்கள் இந்திய முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகும்.
 

ராஜா மௌலியின் இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் அவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக்கியது.

இதனையடுத்து பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி இமாலய வெற்றியடைந்தது, அப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்தார்.

தற்போது இவர் இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திரையுலகை சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். பவன் கல்யாண், சிரஞ்சிவி, மகேஷ்பாபு, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தங்களது நிதியுதவியை அளித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரபாஸ் 4 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். மத்திய அரசுக்கு 3 கோடி நிதியுதவியும், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுக்கு தலா 50 லட்சமும் தந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News