×

விக்ரம் வேதா வெளியாகி 4 வருடம்... கொண்டாடும் ரசிகர்கள்.....

 
vikram vedha

காயத்ரி, புஷ்கர் ஜோடி இயக்குனர்கள் இணைந்து இயக்கி 2017ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என மாதவனிடம் விஜய் சேதுபதி அடிக்கடி கேட்கும் வசனம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். விஜய் சேதுபதியின் தம்பியாக கதிரும், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஷாம் இசையமைத்திருந்தார். தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. காயத்ரி, புஷ்கர் இருவரும் இப்படத்தை இயக்கவுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றோடு 4 வருடங்கள் ஆகிவிட்டதால் #4YearsofVikramVedha என்கிற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News