பெரும்பாலான படங்களில் ஹீரோவையும், வில்லனையும் சுற்றி தான் கதையே நகரும். ஆனால், ஹீரோவும், வில்லனும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி இருக்கும். ஹீரோவாக நடிப்பதற்கும், வில்லனாக நடிப்பதற்கும் மேனரிசம், கெட்டப், உடல்மொழி என எல்லாவற்றிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே படத்தில் ஸ்டைலான மாஸான ஹீரோவாகவும், மிரட்டலான வில்லனாகவும் நடிப்பது கஸ்டமான விஷயம் தான். அதை அசால்ட்டாக செய்து அசத்திய 5 தமிழ் சினிமா நடிகர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அமைதிப்படை – சத்யராஜ்
manivannan sathyaraj
மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் அமைதிப்படை. இந்த படத்தில் சத்யராஜ், கஸ்தூரி, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சத்யராஜின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். இதில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரத்திலும் மிக சிறப்பாக நடித்திருப்பார் சத்யராஜ்.
ஆளவந்தான்- கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் பல வித்யாசமான முயற்சிகளை மேற்கொண்டவர் கமல்ஹாசன் தான். அதே போல ஆளவந்தான் படமும் வித்யாசமான திரைக்கதையை கொண்ட படம் தான். இதில் ஒரு கமல்ஹாசன் கமாண்டோ வீரர், மற்றொரு கமல் கொடூரமான வில்லன். வில்லன் கதாப்பாத்திரத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டு வெறித்தனமாக நடித்திருப்பார் கமல்.
இருமுகன்- விக்ரம்
irumugan
சஸ்பென்ஸ் த்ரில்லன் படமான இருமுகன் படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். நடிகர் விக்ரம் பல வித்யாசமான கதை மற்றும் பல கெட்டப் இருக்கும் கதைகளில் நடிக்கக்கூடியவர். இந்த படத்திலும் லவ் என்ற கேரக்டரில் வில்லியாக பட்டயகிளப்பியிருப்பார் விக்ரம்.
வாலி- அஜித்
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் வாலி படத்திற்கு தனி இடம் உண்டு. இந்த படத்தில் இரட்டையர்கள் கதாப்பாத்திரம் என்பதால், தோற்றத்தில் எந்த வேறுபாடும் காட்டமுடியாது. நடிப்பில் மட்டுமே வித்யாசத்தை காட்ட முடியும். அதை அஜித் மிக சூப்பராக செய்திருப்பார். ஸ்டைலாக, கூலாக இருக்கும் ஹீரோ அஜித் மற்றும், தம்பியின் மனைவி மீது ஆசைப்படும் வக்கிரமான வில்லன் அஜித் என இரண்டு கேரக்டரிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அஜித்.
எந்திரன்- ரஜினிகாந்த்
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் விஞ்ஞானி ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ரோபோ வான சிட்டி ரஜினிகாந்த் வில்லனாகவும் இருப்பர். இந்த படத்தில் ரோபோ சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இதுவரை பார்த்திராத அளவு வித்யாசமாக நடித்திருப்பார். ஸ்டைலான ரஜினிகாந்த் சிட்டி ரோபோ கெட்டப்பில் மிரட்டியிருப்பார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…