×

சைமா விருதுக்கு தேர்வாகியுள்ள 5 தமிழ் இசையமைப்பாளர்கள்... இதில் உங்கள் ஃபேவரைட் யார்?

சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தான் சைமா விருது. இவ்விருது திரைத்துறையில் உள்ள அனைத்து கேட்டகிரிகளுக்கும் வழங்கப்படும். அந்த வகையில் ஆண்டுதோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
sima awards

சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது தான் சைமா விருது. இவ்விருது திரைத்துறையில் உள்ள அனைத்து கேட்டகிரிகளுக்கும் வழங்கப்படும். அந்த வகையில் ஆண்டுதோறும் சைமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான சைமா விருதுகள் பட்டியல் தற்போது வெளியாகி வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் என தேர்வானவர்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கிட்டத்தட்ட ஏழு பிரிவில் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

yuvan sankar raja- cinereporters
yuvan sankar raja- cinereporters

தற்போது அதேபோல் கடந்த ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வு பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திற்காக அனிருத், விசுவாசம் படத்திற்காக இமான், அசுரன் படத்திற்காக ஜிவி பிரகாஷ், பிகில் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான், பேரன்பு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சைமா விருதை பொருத்தவரை ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் என யாருக்கு வேண்டுமானாலும் தங்களது வாக்குகளை இணையம் வழியாக செலுத்தலாம். இறுதியில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர்களுக்கு விருது வழங்கப்படும்.

imman
imman - cinereporters

தற்போது இந்த விருது பட்டியலில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என அனைவரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். இறுதியில் யார் வெல்லப் போவது என்பது சர்ப்ரைசாகவே உள்ளது. ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர் தான் வெல்வார் என சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News