×

50 ரூபாய்க்கு ஆபாச படம் விற்பனை... விருந்து வைத்து கவனித்த போலிஸ்!

கமுதிப் பகுதியில் சிறார் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்து 50 ரூாய்க்கு விற்ற 2 நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்கு கவனித்துள்ளனர் போலிஸ் அதிகாரிகள். 
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறார் ஆபாச படங்களை குறித்து புகார் தெரிவிக்க காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பிரத்யேக கைபேசி எண்ணை - 9489919722 அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.

கடந்த 6ம் தேதி, கமுதி பகுதியில் செல்போன் கடை வைத்திருப்பவர்கள் பாலியல் தொடர்பான ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதை காசுக்காக பதிவேற்றம் செய்து கொடுப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது.

கமுதி பேருந்து நிலையம் அருகில் உள்ள, பழனியாண்டவர் cell Accessories & Browsing Center என்ற கடையில் சோதனை செய்தபோது, கடையின் உரிமையாளர்பொன்னிருள் மற்றும் கடை ஊழியர் வழிவிட்டான்கிழவன் என்பவரும் சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தும் அதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50-க்கு பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் பதிவேற்றம் செய்து கொடுத்து வந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து,இவர்கள் மீது இது கமுதி காவல் நிலையத்தில் குற்ற.எண் 49/2020 பிரிவு 292 (2) (b) மற்றும் Information and Technology 15 P POCSO Act சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News