51 Years of Swag... தர்மன் ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி!
Updated: Aug 15, 2026, 18:13 IST
தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அறிமுகமான முதல் படம் 'அபூர்வ ராகங்கள்'. இந்த படத்தை கே.பாலசந்தர் தான் இயக்கியிருந்தார்.
இப்படம் 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியானது. இன்றோடு ரஜினி திரையுலகில் நுழைந்து 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ரசிகர்களும், திரையுலகினரும் தலைவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள். இதற்காக ரஜினி இப்போது நடித்து வரும் 'தர்மன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 'தர்மன்' படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார், நடிகர் கமல் தான் தயாரித்து வருகிறார்.