×

5ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இது ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News