×

நன்றாக இருந்தும் பேசப்படாத படங்கள்- 6 மெழுகுவர்த்திகள்

6 மெழுகுவர்த்திகள் படம் பற்றிய கட்டுரை
 
6 மெழுகுவர்த்திகள்


சில படங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் சில்வர் ஜூப்ளி படமாக ஆவதற்கு கூட தகுதியான படமாக இருக்கும் ஆனால் அந்த படம் ஓடாது. அப்படியே ஓடினாலும் 100 நாட்களை கடந்தோ இருநூறு நாட்களை கடந்தோ பெரிய அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகவோ ஓடாது. ஆனால் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆவதற்கு அனைத்து தகுதியும் அப்படத்தில் நடித்த நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு சின்ன காரணத்தால் அப்படம் ஓடாது. ஆனால் காரணமில்லாமல் கதையில் எந்த சத்தும் இல்லாமல் லாஜிக் இல்லாமல் ஓடிய படங்கள் பேசப்பட்ட படங்கள் எத்தனையோ இருக்கிறது மொத்தத்தில் ரசிகர்களின் மனநிலையை கணிப்பதென்பது சிரமமான விசயம்
கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி இப்படம் வந்தது. ஷாம் நடிப்பில் முதன் முதலில் வந்த 12 பி படம் பேசப்பட்ட பின்பு அவர் பெண்களின் மனம் கவர்ந்த ஷார்மிங் ஹீரோ ஆனார். அதன் பிறகு அது போன்ற சாக்லேட் பாய் வேடங்கள் அவரை துரத்த அவரும் இப்படியே நடித்தால் சரியா வராது என்று பல அதிரடி படங்களில் நடித்தார் எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த நேரங்களில் வந்த மாதவன் போன்றோர் அலைபாயுதே, மின்னலே போன்ற படங்களில் நடிக்கவும் தொடர்ச்சியாக அவருக்கு சாக்லேட் பாய் வேடங்கள் குவிந்தது ஆனால் டக்கென்று ரன் போன்ற படங்களில் நடித்து தன் சாக்லேட் பாய் இமேஜை மாற்றினார். ஆனால் ஷாமுக்கு அப்படி படங்கள் அமையவில்லை. அவரும் அதிரடியாக நடிக்க முயற்சி செய்த பாலா உள்ளிட்ட பல படங்கள் தோல்வியடைந்தன.6 meluguvartthigal


அதே போல் முகவரி படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களை வித்தியாசமான முறையில் இயக்கி இருந்தாலும். வித்தியாசமான கதைகளை சொல்லி இருந்தாலும் துரைக்கு முகவரி கொடுத்த அளவு எந்த படமும் அதற்கு பிறகு அமையவில்லை. துரை இயக்கிய தொட்டி ஜெயா, நேபாளி படங்கள் எல்லாம் நன்றாக இருந்த படங்கள்தான் பேசப்பட்டதே தவிர பெரிய அளவில் பேசப்படவில்லை.
துரையின் வித்தியாசமான முயற்சியில் வெளிவந்த படம்தான் 6 மெழுகுவர்த்தி திரைப்படம். குழந்தை கடத்தலை விறுவிறுப்பாகவும் சென் டி மெண்ட் ஆகவும் சொன்ன படம்.

6 meluguvarthi
நம்ம ஊரில் வாசலில் விளையாடிய குழந்தையை காணோம், சென் ட்ரல் ஸ்டேசன்ல பெற்றோருடன் நின்ற குழந்தைய காணோம் என செய்திகளில் படித்திருப்பீர்கள். அந்த குழந்தைகளை கடத்தும் வட மாநில கொள்ளையர்கள் அந்த குழந்தைகளை என்ன செய்கிறார்கள் வட மாநிலத்துக்கு அனுப்பி என்ன என்ன வேலைகள் செய்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொன்ன கதை.
சாப்ட்வேர் இஞ்சினியரான ஷாம், பூனம் கவுரின் அழகிய மகன் வெளியே சென்றிருந்த இடத்தில் காணாமல் போக, பிள்ளைப்பாசத்தால் அந்த குழந்தையை தேடி காடு, மேடு , மலை எல்லாம் சுற்றி தாடி எல்லாம் வளர்த்து உடல் எல்லாம் மோசமாகி கடைசியில் குழந்தையை கண்டுபிடிப்பதுதான் கதை.

6 candles


குழந்தை கடத்துவதில் எவ்வளவு நெட்வொர்க் இயங்குகிறது என்பதை விறு விறுப்பாக சொல்லி இருப்பார்.
இந்த படத்துக்காக ஷாம் கஷ்டப்பட்டு நடித்தார். உடலை வருத்தி நடித்தார். படம் ஓரளவு பேசப்பட்டாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அளவு வரவில்லை என்பதில் சினிமா ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
கதைக்கு என்ன தேவையோ அதை இயக்குனர் துரை அழகாக கையாண்டிருப்பார். திரைக்கதையும் நல்ல ஸ்பீடாக இருக்கும் சென் டிமெண்ட், மற்றும் சண்டைக்காட்சிகளும் அருமையாக இருக்கும்.


பத்திரிக்கைகள் பாராட்டினாலும் ஒன்றுமில்லாத கதைகளை பெரிய அளவில் தூக்கி பிடிக்கும் ரசிக மஹாஜனம் இது போன்ற படங்களை கொண்டாடாமல் விட்டு விட்டார்கள் என்பது வருத்தம். இந்த படம் ஓரளவு பேசப்பட்டது என்றாலும் ஓரளவு வெற்றி என்றாலும் இயக்குனரும் நடிகரும் இப்படத்தில் உழைத்த அளவு முழு எதிர்பார்ப்பை பெறவில்லை. இதுதான் தமிழ் ரசிகர்களின் மனநிலை. எதை வெற்றி பெற வைப்பார்கள் எதை தோல்வியடைய வைப்பார்கள் என்றே தெரியாது.


6 மெழுகுவர்த்தி திரைப்படம் இன்னும் மேலே உயரே பறந்து கொண்டாடி இருக்க வேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News