×

லாக் டவுனால் 600 கோடி முடக்கம் – சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது?

தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

 

தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய உடனேயே சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மார்ச் 19 ஆம் தேதி முதல் இன்றுவரை எந்தவொரு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு பணம் முடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களும் பாதி முடிந்த நிலையில் முடக்கப்பட்டன. இதனால் தயாரிப்பாளர்கள் முதல் லைட்மேன் வரை சினிமாவை நம்பி இருக்கும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘விரைவில் அது சம்மந்தமாகவும், திரையரங்குகள் திறக்கப்படுவது சம்மந்தமாகவும் முதலமைச்சர் முடிவு எடுப்பார்’ என அறிவித்துள்ளார். அதனால் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பணிகள் தொடங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News