×

தல 61 பரபர பக்கா ஆக்‌ஷன்.. தல ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கு.. 

 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

வலிமை படத்திற்கு பின் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படக்கதையை சுதா கொங்கரா முதலில் விஜயிடம்தான் கூறியதாகவும், சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதையில்தான் அஜித் நடிக்கவுள்ளார் எனவும், அஜித்துக்கு ஏற்ப சில மாற்றங்களை சுதா செய்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அஜித்தை வைத்து சுதா இயக்கப்போவது வேறு ஒரு கதை என்பது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் போல விறு விறு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படம் எனக்கூறப்படுகிறது.

எப்படியோ,.. அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ஒரு செம விருந்து!...

From around the web

Trending Videos

Tamilnadu News