×

தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா...

தமிழகத்தில் ஏற்கனவே 1821 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
 

இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் 15, விருதுநகரில் 7, நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

அதிக அளவாக சென்னையில் இன்று 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 60 பேர் குணமடைந்தனர். இதுவரை 1020 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதைத்தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News