×

தளபதி 65 பட வேலையில் முருகதாஸ்... வைரலாகும் புகைப்படம்....

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் உள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

இப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஆனால், படத்தின் பட்ஜெட்டை  சன் பிக்சர்ஸ் குறைத்து விட அதிர்ச்சியான ஏ.ஆர்.முருகதாஸ் வேறு தயாரிப்பாளரை தேடும் நிலை ஏற்பட்டது.தற்போது அந்த பஞ்சாயத்து முடிந்து சன் பிக்சர்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிப்பது உறுதியாகியுள்ளது. ரூ.130 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது.

எனவே, இப்படத்தின் கதை, திரைக்கதை தொடர்பான பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரின் அலுவலகத்தில் தளபதி 65 தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அலுவலகத்தில் இப்படம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News