×

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய கணவன் ; கண்டுகொள்ளாத மனைவி – இப்போது சிறையில் !

சென்னை ஆவடியில் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட கணவன் மற்றும் அவரைக் கண்டிக்காத மனைவி ஆகியோரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை ஆவடியில் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட கணவன் மற்றும் அவரைக் கண்டிக்காத மனைவி ஆகியோரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் நரேஷ் மற்றும் விஜயலட்சுமி. நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்ற விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விஜயலட்சுமி மாலை நேரங்களில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியுஷன் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமி ஒருவரிடம் நரேஷ் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கு அவர் மனைவி விஜயலட்சுமியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.  இதையடுத்து அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்கு செல்ல அவரது சகோதரர் நடந்த விவரங்களைப் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க தலைமறைவாக இருந்த நடேஷ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News