×

ஒரே நாளில் 7 பேர் மரணம்.... 700யை தாண்டியது பாதிப்பு! கோர தாண்டவம் ஆடும் கொரோனா 

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 

மத்தியப் பிரதேசத்தில் 35 வயதான நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இவருக்கு எந்தவித பயணத் தொடர்பும் இல்லாத சூழலில், காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு700ஐ தாண்டியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News