×

7 பேர் விடுதலை ; ஆளுநர் பதில் இதுதான் : அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
 

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கோரிக்கை எழுப்பி வருகிறது.
 

எனவே, இது தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

இந்நிலையில், சட்டசபையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள அமைச்சர் சி.வி சண்முகம் ‘ பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணைகளின் அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு எடுக்கப்படும்’ என ஆளுநர் கூறியிருப்பதாக பதிலளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News