×

70 வயது பாட்டியின் வீட்டுக்கு சென்று அத்துமீறிய நபர்… மதுரையில் நடந்த ஆபாச சம்பவம்!

மதுரைக்கு அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டிக்கு இரவில் ஒரு நபரால் பாலியல் தொல்லைக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மதுரைக்கு அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டிக்கு இரவில் ஒரு நபரால் பாலியல் தொல்லைக் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை காவல்நிலைய சரகத்துக்கு உட்பட்ட  கிராமம் ஒன்றில்  70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.  அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த கார்த்திக் பாண்டி என்ற காமக் கொடூரன், மூதாட்டியின் வீட்டிற்குள் இரவில் புகுந்துள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சியான பாட்டியிடம்  பாலியல் ரீதியாக தவறான பேசியது மட்டுமில்லாமல் அத்துமீறவும் முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமுற்ற பாட்டி அவரை எச்சரித்ததும் அங்கிருந்து ஓடியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அந்த நபரைத் தேடியும் கிடைக்கவில்லை. அதன் பின் மறுநாள் காலை ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடந்த  விசாரணையில் கார்த்திக் பாண்டியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News