×

7 வயது பெண் குழந்தைக் கொலை – போலிஸாரை ஏமாற்றி தப்பித்த கொடூரன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எனும் பகுதிக்கருகே உள்ள கிராமத்தில் 7 வயது சிறுமியைக் கொலை செய்ததாக சந்தேகப்படும் கொலைகாரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் போலிஸாரிடம் இருந்து தப்பியுள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி எனும் பகுதிக்கருகே உள்ள கிராமத்தில் 7 வயது சிறுமியைக் கொலை செய்ததாக சந்தேகப்படும் கொலைகாரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் போலிஸாரிடம் இருந்து தப்பியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தகள் மீதான வன்முறைகள் அதிகமாகியுள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த நாகூரன் மற்றும் செல்வி ஆகிய தம்பதிகளின் 7 வயது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். இதனால் பதற்றமான அவரது பெற்றோர் நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலிஸார் நடத்திய தேடுதலில் சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் குளத்தில்  செடிகளுக்கு நடுவில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில்  சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ராஜா என்ற 26 வயது வாலிபர் மீது சந்தேகப்பட்டு கைது செய்தனர். அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கையில் விலங்கு மாட்டி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கைவிலங்கை உருவி விட்டு போலிஸாரிடம் இருந்து ராஜா தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News