×

கொரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிப்பு… 80 நாள்கள் சிகிச்சையில் பூரண குணம் – சாதித்துக் காட்டிய அரசு மருத்துவர்கள்!

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

 

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனாவால் 80 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 80 சதவீதத்துக்கும் மேல் நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்கள் இருவருக்கு சிகிச்சை அளித்து அவர்களை பூரண குணமாக்கியுள்ளனர் மருத்துவர்கள்.

மிகவும் மோசமான நிலையில் ஐயப்பன் என்பவர் தற்போது 80 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதே போல வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மூதாட்டி முனியம்மாள், என்பவருக்கும் 90 நாட்கள் வெண்ட்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் மூலமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். இந்த செய்தி தமிழக அரசு மருத்துவர்களின் மீதான மரியாதையையும் நம்பிக்கையையும் கூட்டியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News