Categories: Cinema News latest news

90’s கிட்ஸ் கவனத்திற்கு.! சக்திமானாக நடிக்க உங்களுக்கு விருப்பமா?! கெஞ்சும் பட நிறுவனம்.!

தற்போது 90’s கிட்ஸ் விருப்பமானவை என்று பல நிகழ்வுகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஓர் டிவி நிகழ்ச்சி என்றால் அது சக்திமான் நிகழ்ச்சி தான்.

இந்த சக்திமான் நிகழ்ச்சியை பார்க்காத 90’s ஹிட்ஸ் இருக்கமாட்டார்கள். என்றே கூறலாம் அதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடித்து இருப்பார்.

வெளிநாடுகளில் சூப்பர் ஹீரோ கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவருவது போல, நம்ம இந்தியாவில் சூப்பர் ஹீரோ கலையம்சம் கொண்ட இந்த சக்திமான் தொடரை திரைப்படமாக மாற்ற பிரபல திரைப்பட நிறுவனமான சோனி பிக்சர்ஸ் முயன்று வருகிறது.

இதையும் படியுங்களேன் –என் அப்பாகிட்ட கதை சொல்லிடுங்க.! சூப்பர் ஹிட் இயக்குனரை கடுப்பேற்றிய விஜய்.!

இதனை பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டு சோனி பிக்சர்ஸ் அதற்கான கதாநாயகனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் பாலிவுட் முன்னணி ஹீரோக்களான அக்ஷய்குமார், ரித்திக் ரோஷன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ஏற்கனவே ஹிர்த்திக் ரோஷன் க்ரிஷ் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து விட்டார். அதனால், சோனி பிக்சர்ஸ் வேறு நாயகர்களை தான் தேடும் என்று கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan