96 பார்ட் 2 கதை ரெடி... காதலிக்க களத்தில் இறங்கும் விஜய் சேதுபதி - திரிஷா!
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்தது படத்திற்கு மேலும் புகழை சேர்த்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி 96 படத்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் பாகத்தின் கிளைமாக்சில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா பிரிந்து விடுவார்கள்.
அதன் பின்னர் எதிர்பாராத விதத்தில் மீண்டும் இருவரும் சந்தித்து பயணத்தை தொடர்வது போல் பார்ட் 2 கதை உருவாக்கியுள்ளாராம் இயக்குனர். இதில் மேலும் ஒரு முக்கிய நடிகை அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என ஜானு - ராம் ரசிகர்கள் ஹேப்பி ஆகிவிட்டனர்.