×

96 ரீமேக் தோல்வி… நாங்க மட்டும் என்ன கேவலமா?.. எகிறிய சமந்தா....

96 தமிழ் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு தோல்வி அடைந்ததை அடுத்து விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் சமந்தா.

 

தமிழில் பெருவெற்றி பெற்ற 96 திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும் நடித்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கிலும் இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன.

இதுவரை விமர்சனங்களுக்கு பதில் சொல்லாத நடிகை சமந்தா இப்போது முதன் முறையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் ‘ஹீரோக்கள் மட்டும் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், எந்த விமர்சனங்களும் இல்லாமல் அடுத்த படத்துக்கு ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகியை குறை சொல்கிறார்கள். ஹீரோக்களுக்கு இணையாக எங்களுக்கு சம்பளம் கொடுப்பதுமில்லை. ஆனால் எங்களிடம் இருந்து கடின உழைப்பைப் பெற்றுக் கொள்கின்றனர்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News