கை கூடாத காதல்!.. லியோ பட வில்லனுக்கு 75 கோடி சொத்தை எழுதி வைத்த ரசிகை..

Sanjay Dutt: தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற எல்லா மொழிகளிலும் நடிகர்களுக்கு தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான ரசிகர்கள் படங்களை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். அதில் சிலர் ரசிகர் மன்றத்தில் இருப்பது, பேனர் கட்டுவது, கட் அவுட் வைப்பது, தனக்கு பிடித்த நடிகரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என அலப்பறை செய்வார்கள்.
தனக்கு பிடித்த நடிகர் தொடர்பான செய்திகளை ஆர்வமாக படிப்பார்கள். அந்த நடிகர் நடிக்கும் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படி வெளியாகும் தகவல்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
விஜயெல்லாம் எப்போது வீட்டை விட்டு வெளியே வருவார் என அவரின் வீட்டின் முன் காத்திருக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித்தெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். ஆனாலும், தல, கடவுளே அஜித்தே என கத்துவது என இன்னும் அவர்கள் அடங்கவில்லை.
இந்நிலையில், தனக்கு பிடித்த ஒரு நடிகருக்காக ஒரு பெண் பல கோடி சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டில் பல வருடங்களாக நடித்து வருபவர் சஞ்சய் தத். 90களில் ஹீரோவாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். அனுமதி இல்லாமல் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு சில வருடங்கள் சிறையிலும் இருந்தார்.
விடுதலை ஆனபின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். பெரும்பாலும் வில்லானாக நடித்து வருகிறார். கேஜிஎப் 2 படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதோடு, விஜயின் லியோ படத்தில் வில்லனாக வந்து கலக்கி இருந்தார். நிஷா பட்டில் என்கிற ரசிகை சஞ்சய் தத்தை காதலித்து வந்திருக்கிறார். அதோடு, அவரை திருமணம் செய்துகொள்ளவும் ஆசைப்பட்டார். ஆனால், அது நடக்கவில்லை.
நிஷா பட்டிலுக்கு 62 வயது இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் தனது சொத்துக்களை சஞ்சய் தத்துக்கு கொடுத்துவிடும்படி வங்கிகளுக்கு கடிதம் எழுதிகொடுத்துவிட்டு இறந்துவிட்டார். இந்த தகவல் சஞ்சய் தத்துக்கு போலீசாரால் சொல்லப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்சய் தத் அந்த சொத்துக்களை ஏற்க மறுத்ததோடு, அவரின் குடும்பத்தினருக்கே அந்த சொத்துக்களை திருப்பி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறாராம்.
இப்படி ஒரு ரசிகையா?...