Categories: Cinema News latest news

“வர்மா” படத்தில் எழுந்த பிரச்சனைதான் என்ன?? சீயான் விக்ரமை ஏமாற்றினாரா பாலா??

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான “வர்மா” திரைப்படத்தை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தில் சீயான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து சக்கை போடு போட்ட “அர்ஜூன் ரெட்டி” திரைப்படத்தின் ரீமேக்தான் இது.

Varmaa

“வர்மா” திரைப்படம் உருவான பிறகு இத்திரைப்படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படம் திருப்தியாக இல்லை என கூறி இத்திரைப்படத்தை அப்படியே டிராப் செய்தது. எனினும் சீயான் விக்ரம்தான் இத்திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என கூறியதாக சில தகவல்களும் வெளிவந்தன.

சீயான் விக்ரமிற்கு “சேது” திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ஆதலால் தனது மகனின் கேரியரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதனால்தான் துருவ் விக்ரமையும் பாலா கையில் ஒப்படைத்ததாக கூறப்பட்டது.

Dhruv Vikram

இந்த நிலையில் இயக்குனர் பாலா, விக்ரமை ஏமாற்றத்தில் தள்ளியதாக ஒரு சம்பவத்தை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் கூறியுள்ளார்

அதாவது “வர்மா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சீயான் விக்ரம் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லவே இல்லையாம். அந்த அளவுக்கு பாலாவின் மேல் நம்பிக்கை வைத்திருந்தாராம் விக்ரம்.

Bala and Vikram

இதனை தொடர்ந்து “வர்மா” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு சீயான் விக்ரம், துருவ் விக்ரம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு பாலா படத்தை திரையிட்டுக் காட்டினாராம். படத்தை பார்த்த விக்ரமிற்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம். தனது மகனின் முதல் திரைப்படம் இவ்வளவு மோசமாக அமைவதா? என எண்ணிய விக்ரம் படத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாராம். அதன் பின் பாலா விக்ரமை தொலைப்பேசியில் அழைத்து “என்ன பாதியிலேயே எழுந்திருச்சிப்போய் என்னைய அசிங்கப்படுத்துறீங்களா?” என கேட்டாராம். அதற்கு விக்ரம் எதுவுமே கூறாமல் தொலைப்பேசியை வைத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: சொந்த தந்தையை இப்படியா அவமானப்படுத்துறது… என்ன இருந்தாலும் விஜய் இப்படி பண்ணிருக்க கூடாது…

Bala

அதன்பின் வேறு ஒரு இயக்குனரை வைத்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் அத்திரைப்படம் மீண்டும் உருவாகி வெளியானதையும், பாலாவின் “வர்மா” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதையும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Arun Prasad
Published by
Arun Prasad