முதல்வருக்கு உண்டான மரியாதையே போச்சு…. சீரியல் நிறுத்த சொல்லி கதறிய ரசிகர்!
முதல்வர் விஜய்:
உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வந்த தளபதி விஜய் அரசியல் கட்சியை தொடங்கி தாவெகா கட்சியை ஆரம்பித்து தற்போது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் மோதிக் கொள்ளும் பேச்சலைகள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
முறையற்ற கோரிக்கை:
விஜய்யை நம்பி அவருக்காக வாக்களித்திருக்கும் மக்கள் தொடர்ந்து அவரிடம் தங்களுக்கு தேவையானவற்றை முறையிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு ரசிகர் எல்லையை மீறி கருது ஒன்றை முன்வைத்துள்ளார். இதனால் முதல்வருக்கு உண்டான மரியாதையே போச்சு.
அதில் அவர் கூறியிருப்பது இதுதான்…. முதல்வர் ஐயா அவர்களே: சிங்க பெண்ணே சீரியலும் எதிர்நீச்சல் சீரியலிலும் பார்க்கவே முடியவில்லை. சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாகி இரண்டு வருஷம் ஆகிறது. இன்னும் அவங்களுக்கு குழந்தை பிறக்கல எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பண்ற ஆட்டூழியத்தை பார்க்கவே முடியல. இதையெல்லாம் பார்த்தாலே எங்களுக்கு மன அழுத்தம் தான் வருது.
சீரியல்களுக்கு தடை:
இந்த மாதிரியான சீரியல்களை தயவு செஞ்சு முடிச்சு விடுங்க. இதுதான் எங்களுடைய கோரிக்கை என்று சிஎம் விஜய்யிடம் தன்னுடைய கருத்தினை முன் வைத்திருக்கிறார் ரசிகர் ஒருவர். முன்பெல்லாம் நியூஸ் சேனல் பக்கம் கூட நாங்க போனதில்லை.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக 24 மணி நேரம் நியூஸ் சேனல் தான் பாத்துட்டு இருக்கோம் என்று ரசிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் சிஎம் ஆனாலும் ஆனார் இவர்கள் பண்ற அலப்பறை தாங்க முடியலையேப்பா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
