Connect with us
siruthai kanguva

Cinema News

தம்பிக்கு ஒரு நியாயம்? அண்ணனுக்கு ஒரு நியாயமா? சூர்யாவை மட்டும் இப்படி கவுத்திப்புட்டீங்களே..!

சூர்யாவுக்குப் பிறகு கார்த்தி திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். அவர் நடித்த பல படங்கள் ஹிட். ஆனால் சூர்யாவின் ஆரம்பகாலப் படங்கள் மாஸ். சமீபத்தில் கதை தேர்வு சரியில்லாததால் நிறைய பிளாப்கள் என்று பலரும் சொல்கின்றனர்.

Also read: ரசிகர்கள் தலைவலியோட போகலாமா?!… என்னப்பா ஆஸ்கார் நாயகனே இப்படி சொல்லிட்டாரு!..

அவருக்கும், அவரது தம்பி கார்த்தியையும் வைத்து ஒரே இயக்குனர்கள் இயக்கிய வெவ்வேறு படங்கள் பற்றிப் பார்ப்போம். யாருக்கு ஹிட், யாருக்கு பிளாப்னு பார்க்கலாமா…

பையா – அஞ்சான்

paiyya anjaan

paiyya anjaan

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் பையா. கார்த்தி, தமன்னா நடிப்பில் சூப்பர் ஹிட் ஆனது. அதே வேளை சூர்யாவை வைத்து அவர் இயக்கிய அஞ்சான் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் – என்ஜிகே

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்பட பலரும் நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் என்ஜிகே. பிளாப் ஆகிவிட்டது.

கடைக்குட்டி சிங்கம் – எதற்கும் துணிந்தவன்

பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கார்த்தியை வைத்து இயக்கிய சூப்பர்ஹிட் படம் கடைக்குட்டி சிங்கம். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அதே இயக்குனர் சூர்யாவை வைத்து இயக்கிய படம் எதற்கும் துணிந்தவன். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரவேற்பைப் பெறாமல் போனது.

சிறுத்தை – கங்குவா

சிறுத்தை சிவா கார்த்தியை வைத்து இயக்கி அதிரிபுதிரி ஹிட் கொடுத்த படம் சிறுத்தை. இந்தப் படத்திற்குப் பிறகு தான் சாதாரண சிவா, சிறுத்தை சிவாவாக மாறினார். ஆனால் அதே இயக்குனர் தற்போது 350 கோடி பட்ஜெட்டில் இயக்கிய படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நீண்டநாளாக படப்பிடிப்பும் நடந்தது.

2000 கோடி

படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் கண்டிப்பா இந்தப் படம் 2000 கோடி கலெக்ஷனை அள்ளும் என்றும் தெரிவித்து இருந்தார். நடிகர் சூர்யா கூட பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்குறது நல்ல விஷயம் தானே என்றும் சொல்லி இருந்தார். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைத்து மொழிகளிலும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள். படத்திற்கு நெகடிவ் விமர்சனங்களே அதிகம் வருகின்றன.

காட்டுக்கத்தல்

Kanguva

Kanguva

படத்தில் காட்டுக்கத்தல் கத்துறாங்க. வேற ஒண்ணுமே இல்லை என்றும் கருத்துகள் பரவலாக வருகின்றன. இந்தப் படத்தின் இந்த அதிகமான இரைச்சல் தான் படத்திற்கு பெரிய மைனஸ் என்ற கருத்து பரவி வரும் வேளையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தெரிவித்துள்ள கருத்து குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளன. அவர் சவுண்டு சிஸ்டத்தில் 2 புள்ளிகளைக் குறைக்கச் சொல்லி இருக்கிறாராம்.

நெட்டிசன்கள் கிண்டல்

Also read: கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா?.. ஞானவேல் ராஜா செய்த வேலை!.. கலாய்க்கும் ஃபேன்ஸ்..

இதுகுறித்து கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள் கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ ஓடிடுமான்னு கிண்டலாகப் பதிவிட்டு வருகிறார்கள். அண்ணன், தம்பிகளாக சூர்யாவும், கார்த்தியும் இருந்தபோதும் இருவருக்கும் ஒரே இயக்குனர்கள் படம் இயக்கிய வேளையில் ஒருவருக்கு ஹிட். மற்றவருக்கு பிளாப்பா என்று எண்ண வைத்துள்ளது இந்தப் பட்டியல்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top