×

கொஞ்சம் கொஞ்சமா உயிர் போகிறது – பேஸ்புக்கில் புலம்பிய முன்னணி இயக்குனர் !

இயக்குனர் வசந்தபாலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் உயிர்போவதாக முகப்புத்தகத்தில் புலம்பியுள்ளார்.

 

இயக்குனர் வசந்தபாலன் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் உயிர்போவதாக முகப்புத்தகத்தில் புலம்பியுள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன வெயில் மற்றும் அங்காடித் தெரு ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர். ஆனால் இடையில் அரவான் மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்கள் அவருக்கு சரியாகப் போகவில்லை. இதனால் சில ஆண்டுகள் எந்த படவாய்ப்பும் கிடைக்காமல் தடுமாறி வந்தார்.

கடைசியாக ஒருவழியாக ஜி வி பிரகாஷை வைத்து ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். சென்னை புறநகர் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் படம் முடிந்தும் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை. இதனால் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் புலம்பித்தள்ளியுள்ளார். அவரின் பதிவில் ’ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும்.ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும்.இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.ஆனா.....இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷ் போன்ற அனைவருக்கும் தெரிந்த ஒரு ஹீரோவின் படமே வெளிவருவது இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் எனில் புது இயக்குனர் மற்றும் நடிகர்களின் படங்களின் கதி என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News