×

பொன்னியின் செல்வனுக்கு முன் துல்கரை வைத்து ஒரு சிறிய படம் – மணிரத்னம் ஐடியா!

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடையில் ஒரு சிறிய படத்தை இயக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.

 

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடையில் ஒரு சிறிய படத்தை இயக்க மணிரத்னம் தயாராகி வருகிறார்.

பொன்னியின் செல்வன் என்ற மிகப் பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போதைக்கு படப்பிடிப்பை தொடர முடியாத சூழலில் தயாரிப்பு தரப்போ பட்ஜெட் செலவைக் குறைக்க சொல்லி மணிரத்னத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் மணிரத்னமோ, அப்படி செய்தால் படத்தின் தரம் குறைந்துவிடும் என நினைத்து இப்போதைக்கு பொன்னியின் செல்வனை ஓரங்கட்ட முடிவு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பாக திரையரங்குகளுக்கு வர நாள் ஆகும் என்பதால் அதற்குள் ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அதில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படம் ரோஜா படத்தின் பார்ட் 2 ஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News