×

90களை கலக்கிய தூர்தர்சன் சீரியல்கள்- ஒரு பார்வை

90களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சில முக்கிய சீரியல்கள் குறித்தது
 
Rayiil sneham

90களை கலக்கிய சீரியல்கள் என எண்ணற்ற சீரியல்களை சொல்லலாம். இன்று டிவியை திறந்தால் எல்லா தொலைக்காட்சியிலும் எண்ணற்ற சீரியல்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. எல்லாமே ஓர் அளவுதான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ஆகிவிட்டது. பெண்கள் சீரியல்களை விரும்பி பார்க்கின்ற ஒரே காரணத்துக்காக அளவுக்கதிகமாக சீரியல்களை எல்லா தொலைக்காட்சிகளிலும் போட்டு சேனல்கள் மொக்கை போடுகின்றனர் ஆனால் 80, 90களில் தூர்தர்ஷனில் மட்டும்தான் சீரியல்கள் அதுவும் தினமும் ஒண்ணே ஒண்ணு கண்னே கண்ணு என ஒற்றை சீரியல்கள்தான் வந்தன. அவை வாரம் ஒரு முறைதான் ஒளிபரப்பபடும் இந்த வாரம் ஒரு முக்கியமான திருப்பத்தில் அந்த சீரியல் முடிந்தால் அடுத்த வாரத்துக்கு ரொம்பவும் ஏங்க வைக்கும் எப்போடா அடுத்த வாரம் வரும் என இருக்கும் அப்படியாக 80 , 90களில் புகழ்பெற்ற சீரியல்கள் சில.

கீழே குறிப்பிட்டுள்ள சீரியல்கள் அனைத்தும் 80 மற்றும் 90களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானவை மட்டுமே

நீலா மாலா

80களின் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷனில் திரைமலர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அந்த திரைமலர் நிகழ்ச்சிக்கு பின்பு ஒளிபரப்பாகும் சீரியல்தான் நீலா, மாலா இந்த சீரியல் மிகவும் வரவேற்பை பெற்றது விடுகதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நீனா குழந்தை நட்சத்திரமாக இப்படத்தில் நடித்திருப்பார். அமராவதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய செல்வாவுக்கு இந்த சீரியல்தான் முதல் இயக்கம். நடிகர் தலைவாசல் விஜயும் இந்த சீரியலில்தான் முதலில் அறிமுகமானார் மிக பிரபலமான சீரியல் இது.

ஜனதா நகர் காலனி

பிரபல துக்ளக் ஆசிரியரான மறைந்த சோ நடித்த பிரபலமான வார சீரியல் இது. இது நகைச்சுவையாக இருந்ததால் பலரும் இந்த சீரியலை விரும்பி ரசித்தனர். ஞாயிற்றுக்கிழமையில் ஒளிபரப்பாகும்.

அம்லு

தல அஜீத்தின் மனைவியாக இருக்கும் ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போது நடித்த சீரியல் சுட்டிப்பொண்ணு யாரு சொல்லு என்ற டைட்டில் பாடலே மனம் கவரும்.

வண்ணக்கோலங்கள்:

எஸ்.வி சேகரின் வண்ணக்கோலங்கள் சீரியலில் நிமிடத்துக்கு ஒரு சிரிப்பு கியாரண்டி என்ற வகையில் வெடிச்சிரிப்புகள் அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும். தூர்தர்ஷனிலேயே இரண்டு மூன்று முறை ரீ டெலிகாஸ்ட் ஆன சீரியல் இது.

அடடே மனோகர்

அடடே மனோகர் என்ற சீரியல் தமிழ்சினிமாக்களில் சில வேடங்களில் தலை காட்டி இருக்கும் நடிகரான அடடே மனோகர் நடித்திருப்பார் காமெடியான சீரியல் இது இதுவும் ரசிகர்களை கவர்ந்தது.

ரயில் சினேகம்

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த சீரியல் 90ம் ஆண்டு வெளியானது மிக அற்புதமான சீரியல். சீரியல் என்றாலும் ஒரு திரைப்படம் அளவுக்கு நாடகத்தன்மை இல்லாமல் இந்த சீரியல் இயக்கப்பட்டிருக்கும். சினிமா இசையமைப்பாளர் வி.எஸ் நரசிம்மன் இந்த சீரியலுக்கு இசையமைத்திருப்பார். முதன் முதலில் சீரியலில் பாட்டு ஹிட் ஆனது இந்த சீரியலுக்காகத்தான் இருக்கும் . இந்த வீணைக்கு தெரியாது, ரயில் சினேகம் உள்ளிட்ட பாடல்கள் இந்த சீரியல் மூலம் புகழடைந்தன.

இரவில் ஒரு பகல்

80களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான த்ரில்லர் சீரியல்தான் இரவில் ஒரு பகல் இந்த சீரியலில் ரேவதி, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிக பரபரப்பான இந்த சீரியல் சீட்டின் நுனிக்கே வரவைக்கும் அளவுக்கு ஒரு ஆக்சன் படம் பார்க்க வைக்கும் அளவு புகழ்பெற்ற சீரியல் இது. சுரேஷ் மேனன் இயக்கி இருந்தார்.

பெண்

இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுகாசினி இந்த சீரியலை இயக்கி இருந்தார் வாரம் ஒரு கதையில் அப்போதைய முக்கிய நடிகைகள் இந்த சீரியலில் நடித்தனர்.இது 91ம் ஆண்டு வெளிவந்தது.

pen serial

என் இனிய இயந்திரா

சிவரஞ்சனி நடித்த இந்த சீரியல் திங்கட்கிழமைகளில் தூர்தர்சனில் வெளிவரும். சுஜாதா எழுதிய இந்த கதையில் எதிர்காலத்தில் வீடியோ காலில் எல்லாம் பேசலாம் என காட்சிப்படுத்தி இருந்ததை பார்த்து இப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்குமா என ஆச்சரியப்பட வைத்தது. சிபி, ஜீவா போன்ற கதபாத்திரங்கள் இந்த சீரியலில் ரசிக்க வைத்தன.

கொலையுதிர்காலம்

சுஜாதா எழுதிய இந்த சீரியல் வாரா வாரம் புதன் கிழமை வரும். மறைந்த நடிகர் விவேக் நடித்திருந்தார். கார்த்திகை பவுர்ணமி நாளில் என்ற பாடலுடன் இந்த சீரியல் ஆரம்பமாகும். மிக மிக சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரியலாக இந்த சீரியல் வந்தது. புதன் கிழமை காலை 11 மணியளவில் இந்த சீரியல் ஒளிபரப்பானது.

நிலவை தேடி

அனிருத்தின் அப்பாவும் விசுவின் பல படங்களில் நடித்தவருமான ரவி ராகவேந்தர் நடித்த சீரியல் இது. காதல் கோட்டை படத்திற்கு முன்னரே வந்த காதல் கோட்டை பட டைப்பான சீரியல். முகம் தெரியாமல் பேசும் பெண்ணை தேடி அலைவதுதான் கதை. இதுவும் வெற்றி பெற்ற சீரியல்தான்.

இவளா என் மனைவி

90களில் வெளியான இந்த சீரியலில் சரத்பாபு நடித்திருந்தார். பெண்களால் ஏகோபித்த ஆதரவை பெற்றது இந்த சீரியல்

சக்தி 90

90ம் ஆண்டு வெளியான இந்த சீரியலும் தூர்தர்சனில் வாரா வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றது

விழுதுகள்:

தமிழின் முதல் முதல் வந்த தினம் தோறும் ஒளிபரப்பான சீரியல் இதுதான். இந்த சீரியல் வெற்றிக்கு பிறகுதான் தினசரி சீரியல்கள் சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் வெளியாக தொடங்கின.

மேலும் ஒய் ஜி மகேந்திரனின் அம்பிகாபதி, துப்பறியும் சாம்பு, ஷோபா சந்திரசேகர் இயக்கிய அம்மாவுக்கு கல்யாணம் உள்ளிட்ட பல சீரியல்கள் 90களை கலக்கின என்றால் மிகையாகாது.

From around the web

Trending Videos

Tamilnadu News