×

ரசிகர்களின் ரசனையால் வெற்றியடைந்த படங்கள்
80களில் வெளியான படங்கள் - ஓர் பார்வை

 
billa

1980களில் வெளியான படங்களில் பெரும்பாலும் ஹிட்டானவை என்றே சொல்லலாம். தமிழ்சினிமாவின் பொற்காலம் என்றும் இதனைக் கூறலாம். ஒரு படம் நல்லா இருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அதில் நடிக்கும் நடிகர்கள் அவர்களுக்கு முக்கியமில்லை. படம் நல்லா இருக்க வேண்டும் என்ற ரசிப்புத்தன்மை கொண்டவர்கள் அன்று ஏராளமானோர் இருந்தனர் என்பதை அப்படங்களின் வெற்றி தோல்வியே தீர்மானித்து விடுகின்றன. கிட்டத்தட்ட ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ், கார்த்திக் இவர்கள் மட்டுமல்லாது சுரேஷ், சங்கர் போன்று பிரபலமாகாத நட்சத்திரங்களின் படங்களும் டாப் ரகங்களாக இருந்தன. அவற்றுள் ஒரு சில படங்களை இங்கு பார்க்கலாம். 

பில்லா
மை நேம் ஈஸ் பில்லா என்று அதிரடி பாடல் இடம் பெற்ற...படம் பில்லா. 
இந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் 80 களில் பட்டையைக் கிளப்பியது. ரஜினிகாந்தின் ஸ்டைல் லுக்கிற்காகவே இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் செம மாஸ் ஆனது. 

டைரியில் டிவிஸ்ட் வைத்து அதைத் தேட மலேசியாவுக்கு புறப்படும் விறு விறு கதையுடன் ஆரம்பிக்கும் படம். ரஜினிதான் பில்லா. இந்த படத்தை ரீ மேக் செய்து அஜித் நடித்தபோதும் வசூலை வாரிக்குவித்தது.

மௌனராகம் 

1986ல் மணிரத்னம் இயக்கிய படம் மௌனராகம். கார்த்திக், ரேவதி, மோகன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர். மோகன் எந்தவித அலட்டலும் இல்லாமல், முக்கியமாக கையில் மைக் இல்லாமல் நடித்தும் அவர் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொண்ட படம். படத்தில் கார்த்திக் வழக்கம் போல் துரு துரு என வந்து அசத்துவார். சந்திரமௌலி...ஏ...சந்திரமௌலி என அவர் வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு பேசுவது போல் பேசும் வசனங்கள் அவருக்கே உரிய ஸ்டைல். ரசிகர்களை கவர்வதில் தனித்திறன் கொண்டவர். படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா.., பனி விழும் இரவு...போன்ற பாடல்கள் அப்போதைய வானொலிகளில் ஒலிக்காத நாள்களே இல்லை எனலாம். 

அம்மன் கோயில் கிழக்காலே
1986ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் அம்மன்கோவில் கிழக்காலே. விஜயகாந்த், ராதா, செந்தில், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். விஜயகாந்த்துக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம். இந்த படத்தில் இளையராஜா வழங்கிய அத்தனை பாடல்களும் முத்தனாவை. விஜயகாந்த் அவ்வளவாக அதிரடி ஆக்ஷன் காண்பிக்காமல் நடித்த படம். செதுக்கி வச்ச சிலை மாதிரியான அழகில் ராதாவை படத்தில் காட்டியிருப்பாரகள். இப்படத்தின் தலைப்பானது சகலகலாவல்லவன் படத்தில் இடம்பெறும் அம்மன்கோவில் கிழக்காலே..என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. சின்னமணிக்குயிலே.., கடைவீதி.., ஒரு மூணு முடிச்சாலே...பூவ எடுத்து ஒரு...ஆகிய பாடல்கள் தேனானனவை. அந்தப்பாடல்களின் ராகமும் சரி, இளையராஜாவின் இசையும் சரி. நம்மை வேறொரு உலகத்திற்கே அழைத்துச் சென்று விடும். 

சகலாகலா வல்லவன்

1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் சகலகலா வல்லவன். கமல்ஹாசன், அம்பிகா, வி.கே.ராமசாமி நடித்த படம். இன்று வரை இந்த படத்தில் இடம்பெற்ற ஹேப்பி நியூ இயர் பாடல்தான் புத்தாண்டுதோறும் ஒளிபரப்பி மகிழ்கிறார்கள். சில்க் ஸ்மிதாவின் நேத்து ராத்திரி யம்மா பாடல் இன்று வரை சூப்பர் ஹிட்டாக உள்ளது. பக்கா மசாலா படம் இது. ஆனால் வசூலில் வாரிச் சுருட்டிய படமும் இதுதான். கமல்ஹாசன் வசூல் மன்னனாக தன்னை நிரூபித்த படம். இப்படத்தில் அம்மன் கோவில் கிழக்காலே.., இளமை இதோ இதோ..., நேத்து ராத்திரி யம்மா, நிலாக்காயுது...பாடல்கள் சூப்பர்ஹிட்டானவை. படத்தில் கமல் போடும் சிலம்பு சண்டை தூள். கமல் கொண்டையுடன் நடித்து இருப்பார். பின்னர் இங்கிலீஷ்காரன் போல ஸ்டைலான லுக்கிலும் நடித்து இருப்பார். 

நல்லவனுக்கு நல்லவன்

1984ல் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் ஏவிஎம் தயாரித்து எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம். கார்த்திக்கும் இந்த படத்தில் நடித்து இருப்பார். ரஜினியின் நடிப்புக்கு கொஞ்சம் தீனி கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். நடிப்பில் ஒருபக்கமும், அதிரடி ஆக்ஷனில் இன்னொரு பக்கமுமாக விளையாடிருப்பார் ரஜினி. வெள்ளி இரவு இந்த படத்தை சன் டிவி ஒளிபரப்புகிறது. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு.., உன்னைத்தானே..., வச்சிக்கவா.., முத்தாடுதே...ஆகிய பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்டாக இருந்தன.

எங்கேயோ கேட்ட குரல் 

1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் எங்கேயோ கேட்ட குரல். ராதா, அம்பிகா, டெல்லி கணேஷ_ம் படத்தில் நடித்திருந்தனர். ஆத்தோரம் காத்தாட...ஒரு ஆசை தோணுது, பட்டுவண்ண சேலைக்காரி...பாடல்கள் ஹிட் ரகங்கள். இந்தப்படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். ஹீரோ இமேஜ் பார்க்காமல் கதையை நம்பி ரஜினி நடித்த படம். திருமணம் குறித்தும், சடங்கு சம்பிரதாயங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட படம். ஆண் காதல் தோல்வியாகி திருமணத்;திலும் தோல்வி அடைந்தாலோ, பெண் திருமணமாகி தோல்வி அடைந்தாலோ சமுதாயத்தில் அவர்களின் கதி என்ன என்பதை தோலுரித்துக் காட்டிய படம். இந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ரஜினியின் சிறந்த நடிப்புக்காக பேசப்பட்ட படம்.  இந்தப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.   

ஒருதலை ராகம்

1980ல் வெளியான இப்படத்தில் சங்கர், ரூபா, உஷாராஜேந்தர், சந்திரசேகர் ஆகியோர் நடித்தனர். கதையை டி.ராஜேந்தர் எழுத, இப்ராகிம் இயக்கியிருப்பார். 1999ல் இதே படம் தெலுங்கில் பஞ்சதாரா சிலக்கா என்ற பெயரில் வெளியானது. இப்படத்தின் பாடல்களை டி.ராஜேந்தர் எழுதி, இசையமைத்திருப்பார். என் கதை முடியும் நேரமிது.., இது குழந்தை பாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, கூடையிலே கருவாடு, நான் ஒரு ராசியில்லா ராஜா.., வாசமில்லா மலரிது..வசந்தத்தைத் தேடுது...ஆகிய பாடல்கள் அத்தனையும் தித்திப்பானவை. ஒரு தலை காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்தது. 

வைதேகி காத்திருந்தாள்

1984ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்தனர். இப்படத்தில் அழகு மலராட.., இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, காத்திருந்து...காத்திருந்து.., மேகம் கருக்கையிலே.., ராசாவே உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ஆகிய பாடல்கள் மனது மறக்காதவை. இந்தப்படத்தில் விஜயகாந்த் தாடியுடன் சோகமாக காணப்படுவார். முதல் 20 நிமிடங்கள் படத்தில் பேசாமல் நடித்து இருப்பார். படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஓர் மைல்கல்.

பயணங்கள் முடிவதில்லை 
1982ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் பயணங்கள் முடிவதில்லை. மோகன், பூர்ணிமா ஜெயராம், பூரணம் விசுவநாதன், ராஜேஷ், எஸ்.வி.சேகர் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை மோகன் பெற்றார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பூர்ணிமா ஜெயராம் பெற்றார். ஹே...ஆத்தா...ஆத்தோரமா...வாரீயா.., இளைய நிலா பொழிகிறதே..., மணியோசை கேட்டு எழுந்து.., முதல் முதல் ராக தீபம் ...ஏற்றும் நேரம்...புயல் மழையோ.., சாலையோரம் சேலை ஒன்று, தோகை இளமயில் ஆடி வருகுது, வைகறையில் வைகைக் கரையில் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை. மோகன் சினிமாக்களில் இது மறக்க முடியாத படம். இப்படத்தில் இருந்து தான் இவர் மைக் மோகன் ஆனார். 

அந்த 7 நாட்கள் 

1981ல் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் அந்த 7 நாட்கள். பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா, கல்லாப்பெட்டி சிங்காரம் ஆகியோர் நடித்த இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தின் விசேஷம் என்னவென்றால் குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைக் கொண்டு நேர்;த்தியான திரைக்கதையை அமைத்திருப்பார் பாக்யராஜ். இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் வெளியானது. கவிதை அரங்கேறும் நேரம்.., எண்ணி இருந்தது ஈடேற..., தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ.., பாடல்கள் இனிமை.

From around the web

Trending Videos

Tamilnadu News