Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ரீவைண்ட் – பாண்டி நாட்டு தங்கம்- திரைப்படம் ஒரு பார்வை

பாண்டி நாட்டு தங்கம் திரைப்படம் பற்றிய சிறிய பார்வை

709d356ffc8d473a6652bc384049bd55-2

தமிழ் திரையுலகில் 1985, 1989ம் ஆண்டுகள் மிக மிக அற்புதமான ஆண்டுகளாகும் பெரும்பாலான 80ஸ் படங்கள் எல்லாம் இந்த இரு ஆண்டுகளிலும் அதிகமாக வெற்றி பெற்றிருக்கும் . அப்படியாக 1989ம் ஆண்டு மே 18ம் தேதி வெளியான திரைப்படம்தான் பாண்டி நாட்டு தங்கம். கார்த்திக், நிரோஷா, எஸ்.எஸ் சந்திரன், செந்தில் மற்றும் பலரானோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் டி.பி கஜேந்திரன் இயக்கிய படமிது. 80ஸ் கிட்ஸ் அனைவருக்கும் இந்த திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாகும். 80ஸில் வெளிவரும் படம் எல்லாம் வித்தியாசமான கதைக்களம் எல்லாம் அதிகம் இருக்காது. நாலு பாட்டு நாலு பைட்டு நல்லா இருக்கணும் என நினைப்பார்கள் அப்படி வெளிவந்த படங்கள்தான் 80ஸில் பெரும்பாலும் ஹிட் ஆன படங்களாகும்.

3c9f75a41c6721971a7ab142b3802af3

அது போலத்தான் பாண்டி நாட்டு தங்கம் திரைப்படமும் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகர் தயாரிப்பாளர் சங்கிலி முருகனின் மீனாட்சி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இப்படம் வெளிவந்தது .

படத்தின் கதை ராஜவர்மன் என்ற இயக்குனருடையது இவர் பின்னாட்களில் தங்க மனசுக்காரன், மணிக்குயில் உட்பட முரளியை வைத்து சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கரம் மசாலா கலந்த கிராமத்து கதைகளை எழுதுவது இயக்குனர் ராஜவர்மனுக்கு எளிதானது என்று சொல்லும் வகையிலே அவரின் படங்கள் இருக்கும். அது போலவே பாண்டி நாட்டு தங்கம் திரைப்படமும்.

20d3afedd5ee1a15a7c3f3e1011a4311

அதுவரைக்கும் போலீஸ் அதிகாரியை மையப்படுத்தியே அதிக சண்டைப்படங்கள் வந்து கொண்டிருக்க முதல் முறையாக ஒரு காட்டிலாகா வனத்துறை அதிகாரி வந்து அதிரடி காட்டினால் எப்படி இருக்கும் என்று கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

அரதப்பழசான கதை என்றாலும் இப்படம் 80ஸ், 90ஸ் கிட்ஸுக்கு இன்றும் ஞாபகம் வரும் வரையில் இப்படம் வந்த காலங்கள் மனதில் நிழலாடும்.

இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். உன் மனசுல பாட்டுத்தான் , மயிலாடும் பாறையில, ஏலேலங்குயிலே, இளம் வயசுப்பொண்ண வசியம் பண்ணும் , சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு என்று அனைத்து பாடலுமே சூப்பர் ஹிட் ஒரு இசை ஆல்பத்தில் எல்லா பாடல்களையும் திரும்ப திரும்ப கேட்கலாம். இப்படி படத்தின் எல்லா பாடலும் பெரிய ஹிட் ஆவது என்பது ஆச்சரியமான விசயம்தான். தற்போது எல்லாம் இது போல ஃபுல் ஹிட் இசை ஆல்பத்தை எதிர்பார்க்க முடியாது மிகவும் கடினம்.

நடிகர் கார்த்திக்கிற்கு இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. நகரத்து தியேட்டர்களில் ஓடிய படங்கள் சில காலத்துக்கு பிறகு கிராமத்து டெண்ட் கொட்டாய் ரக தியேட்டர்களுக்கு வரும் அப்படி வரும் படங்கள் 1 நாள் அல்லது இரண்டு நாள்தான் ஓடும். ஆனால் பாண்டி நாட்டு தங்கம் திரைப்படம் பல கிராமத்து டெண்ட் கொட்டாய்களில் திரையிடப்பட்டாலும் அங்கும் நீண்ட நாட்கள் ஓடியது. அந்த அளவிற்கு இந்த படம் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top